PONNIENSELVAN

HI I AM RAJARAJAN FROM TAMILNADU, PLEASE KEEP WATCH MY WEBSITE.

Wednesday, August 10, 2011

நாடோடிமன்னன் பேசுகிறேன்

வணக்கம் தோழர்களே , உலக சரித்திரம் பேச போகிறேன் என்று கூறினேன் அல்லவா, அப்படி சரித்திரம் பேசுனா! அதில தமிழகத்தை பத்தி கண்டிப்பா சொல்லணும் , இல்லேன்னா அது சரித்திரமே இல்லை . அந்த அளவுக்கு தமிழகம் சரிதிரதிரம் உயர்ந்தது . அதற்கு உதாரணம் ஒரு சிறு கதை . என்னடா இவன் கதை சொல்ல போகிறேன் என்று நினைகதிர்கள் , சிறு கதைதான் . அன்று பாண்டியர் அரண்மனை பெரும் கலக்கத்தில் இருந்தது , காரணம் இரு அயல் நாட்டு வணிகர்கள் கிளப்பிய பிரச்சனையே , அவர்களுக்கு தங்கள் வணிக பொருட்களின் லாபங்களை பிரிப்பதில் பெரும் சர்ச்சை எழுந்தது , பிரச்சனைக்கு தீர்வு காண மன்னனிடம் சென்று முறையிடலாம் என கருதினர் . ஆகவே இருவரும் அரண்மனைக்கு புறப்பட்டனர் அங்கு வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது , காரணம் மன்னன் பதினெட்டே வயதே மதிக்க கூடிய இளம் வாலிபன் , எந்த அனுபவமும் இல்லாத இந்த சிறு வலிபநிடமிருந்து தங்களுக்கு என்ன நீதி கிடைத்து விடபோகிறது என்று பெருமுசெரின்தனர் , சரி சபை பெரியோர்களிடமும் அமைச்சர்களிடமும் நீதி கேட்கலாம் என்றால் " அவர்களும் இப் பிரச்னை குறித்த தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் தவித்தனர் , பாண்டிய நாட்டின் நீதி பரிபாலனம் இவ் வணிகர்களால் பெரும் அவப்பெயரினை பெரும் என்று சபையோர் கலக்கமுற்றனர் , அப்போது அரியணையில் அமர்ந்திருந்த பாண்டிய மன்னன் வணிகர்களே தங்களின் ஐயத்தை நாங்கள் அறிவோம் . கலக்கம் வேண்டாம் தங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் ஒரு நபர் எம்மிடம் இருக்கிறார் , நாளை காலை அரண்மனைக்கு வாருங்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் , அமைச்சரே அது இவர்களை நமது விருந்தினர் மாளிகையில் தங்க வையுங்கள் , மறு நாள் பொழுது பிறந்தது , சபை கூடியது . அரியணை வெறுமையை இருந்தது பக்கத்திலேயே ஒரு சிறு ஆசனம் போடப்பட்டு அதில் ஓர் கிழவர் அமர்ந்திருந்தார் , முன்தினம் மன்னர் கூறிய நபர் அவரகதான் இருக்கும் என சபையோர் கருதினர் , அவரை இதற்கு முன் யாருமே பார்த்ததில்லை , வழக்கு கிழவரிடம் கூறப்பட்டது , கிழவர் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் வழக்கிற்கு ஓர் நல்ல தீர்பளித்தார் . பின்பு சபையோரை நோக்கி சபையோர்களே இவர்கள் நம் விருந்தினர் என்று மன்னர் என்னிடம் கூறினார் ஆகவே விருந்தினர்க்கு பரிசில் கொடுப்பது நமது மரபு , இதோ எனது பரிசு என்று கூறிய கிழவர் கண் இமைக்கும் நேரத்தில் தனது தலை முடியையும் தடியையும் பிய்த்து வீசினர் , அடுத்து நொடி சபையே ஆ வென வை பிளந்தது , அங்கே அழகிய இளம் பாண்டிய மன்னன் நின்று கொண்டிருந்தான் , வணிகர்களே என் வயதை வைத்து என்னை தங்கள் மதிபிட்டிர்கள் அதனால் எமக்கு அனுபவம் குறைவென கருதிநீர் , யாரையும் வயதை வைத்து எடை போடுவது தவறு என்பதை வயதில் பெரியவராகிய தங்களுக்கு நான் உணர்த்த தேவை இல்லை என்றார் , வணிகர்கள் தலை கவிந்தன்ர் , பின்பு மன்னனிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டு அவரை மனதார வாழ்த்தினார்கள் , ( நீதி : வயதை கொண்டு யாரையும் எடை போடா கூடாது குழந்தைகளே ) என்னடா குழந்தைகளே என்கிறானே என்று பார்கிரிர்களா , இது நான் குழந்தைகளுக்கு சொன்ன கதை . பெரியவர்களுக்கு இனி வரும் , சரி அந்த பாண்டிய மன்னர் யார் தெரியுமா? தலையங்கனம் என்ற இடத்தில சேரர்களையும் சோழர்களையும் ஒரு சேர வென்றவன் , "தலையங்கனத்து சேறுவென்ற நெடுஞ்செழிய பாண்டியன் " . பாண்டிய வம்சத்தில் மிக இளம் வயதில் அரியணை ஏறியவன் என்ற பெருமையும் இவனுக்கு உண்டு . ஆனால் இன்று இளைய தலை முறையின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது, இந்த பாண்டியனை போல் நாமும் பிறந்த நாட்டின் பெருமை காக்க வேண்டாமா?

0 Comments:

Post a Comment

<< Home