PONNIENSELVAN

HI I AM RAJARAJAN FROM TAMILNADU, PLEASE KEEP WATCH MY WEBSITE.

Thursday, August 18, 2011

நாடோடிமன்னன் பேசுகிறேன்

வணக்கம் தோழர்களே , இது என்னுடைய மூன்றாவது அத்தியாயம் . இன்னைக்கு நாட்டில் எங்கு பார்த்தாலும் பஞ்சம் பட்டினி விலைவாசி ஏற்றம் என நாடே பாழ் பட்டு கிடக்கிறது . காரணம் விவசாயம் இல்லாமை ஏன் விவசாயிகள் விவசாயம் பண்றது இல்லையா ? அதுவும் ஒரு காரணம் இன்னைக்கு இளைய தலைமுறைகள் விவசாயம் பண்றத விரும்ப வில்லை . கம்புட்டர் படிச்சிட்டு வெளி நாடுகளில் வேலை பார்கிறதை கௌரவமா நினைகிறங்க, அப்படியும் ஒரு சில பேர் விவசாயம் பண்ணனும்னு ஆர்வமா விவசாயத்தை பத்தி படிச்சாலும் , படிச்சி முடிச்சிட்டு விவசாயம் பண்ண வந்தாலும் , அவர்களால் விவசாயம் பண்ண முடியாத சூழல்தான் இன்னைக்கு இருக்கு சரியான மழை இல்லை அப்படியே மழை வந்தாலும் அதை சேகரிக்க சரியான நீர் நிலைகள் இல்லை , அப்போ நமது முன்னோர்கள் எப்படி விவசாயம் பார்த்தார்கள் .......? வர்களுக்கு நல்ல தலைவர்கள் இருந்தார்கள் , நல்ல மன்னர்களை அவர்கள் பெற்றிருந்தார்கள் அம்மன்னர்கள் தங்கள் குடிகளுக்கு விவசாயத்திற்கு வேண்டிய அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள் . நாடெங்கும் நீர் நிலைகள் ஏரிகள் குளங்கள் வெட்டினார்கள் , ஆறுகளை ஒழுங்கு செய்து சிறு சிறு ஓடைகளை வெட்டினார்கள் . அதன் மூலம் நாடெங்கிலும் விவசாயம் செழித்தது , சரி அதெல்லாம் கிடக்கட்டும் அதுக்கு என்ன இப்போ என்கிறிர்களா , அப்போதிருந்த நமது முன்னோர்கள் மாதிரி புதுசா ஏரிகளும் குளங்களும் வெட்ட வேண்டாம் , அவங்க உருவாகின விசயங்களை பத்திரமா பாதுகாதிருகலாம் , ஆனால் அவர்கள் அப்படி செய்ய வில்லை , அப்படி அவர்கள் கவனிக்காமல் விட்ட நீர்நிலைகள் நிறைய.....! அதில் ஒன்றை பற்றி சொல்கிறேன் , அதன் மகத்துவத்தையும் விவரிக்கிறேன் , கேளுங்கள் . சரியாய் ஒன்பதாம் நூற்றாண்டு சோழ நாட்டை முதலாம் பராந்தக சோழன் ( இவர்தான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை அமைத்தவர் ) ஆட்சி செய்த காலம் அது , அவருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் , ராஜதித்தன் கண்டராதித்தன் அரிஞ்சயன் அரிகுலகேசரி , இவர்களில் ராஜதித்தன் மூத்தவன் என்பதால் இவனே சோழ நாட்டின் படை தலைவன் ஆவான் . இன்னைக்கு இருக்கிற தலைவர்கள் பையன்கள் போல் சொகுசு வாழ்க்கை வாழ முடியாது , அன்று மிக சிறு வயதிலேயே நாட்டின் பொறுப்புகளில் பங்கேற்க வேண்டும் , அப்படி மிக சிறு வயதிலேயே நாட்டின் படைத்தலைவன் ஆகியவன் ராஜாதித்த சோழன் , இவன் படை தலைவனாக இருந்த அந்த நேரத்தில் வடக்கிலிருந்து ரச்டிரகூடர்கள் படை எடுத்து வந்தார்கள் , மன்னன் படைத்தலைவனின் தலைமையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை போருக்கு அனுப்பினான் , அப்படை சோழ நாட்டின் வடமேற்கில் படை வீடு அமைத்து தங்கியது , அதாவது இன்று சிதம்பரத்தின் வடமேற்கு பகுதி , அன்று அந்த பகுதியை சோழ பேரரசுக்கு அடங்கிய சிற்றரசு சம்புவரையர் ஆண்டு வந்தனர் , படை கிட்டத்தட்ட ஆறு மாத காலம் அங்கு தங்கி இருந்தது அனால் கடைசி வரை ரச்டிரகூடர்கள் வரவே இல்லை . அதன் காரணம் சரித்திரத்திலும் இல்லை , சம்புவரையர்களுக்கு நீண்ட காலமாகவே ஒரு குறைபாடு இருந்தது என்ன வென்றால் அவர்கள் பகுதி வறண்ட பூமி ஆகவே அங்கு விவசாய தொழில் செழித்து வளர வில்லை .
இதை பற்றி அவர்கள் ஏற்கனவே மன்னனிடம் முறையிடிருந்தர்கள் . இது இளவல் ராஜதித்தனுகும் தெரியும் , படை தலைவன் மனம் சிந்தனயில் ஆழ்ந்தது . ராஷ்டிரகூட படை வராததால் சோழ படை வீரர்களும் சொர்வடைதிருந்தர்கள் ஆகவே படை தலைவன் அங்கு ஒரு ஏரியை ஏற்படுத்த தீர்மானித்தான் . சோழ வீரர்களும் சம்புவரைய வீரர்களும் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டார்கள் , வீரர்கள் என்றல் இப்போதிருப்பதை போல் வெறும் அரசாங்க சம்பளத்திற்கு மட்டும் வேலை பார்பவர்கள் அல்ல . மன்னன் மீது மிகுந்த பாசமும் பக்தியும் கொண்டிருந்தனர் , ஆகவே படைத்தலைவனின் உத்தரவை சிரமேற்று கடமை ஆற்றினர் , ஏரியை வெட்டி முடிக்க ஆகிய காலம் எனக்கு சரியாக தெரியவில்லை அதனால் என்னை மன்னிக்கவும் . கணிப்பாக சொன்னால் சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி இருக்கலாம் . ஏரிக்கு சுமார் எழுபத்திநான்கு மதகுகள் அமைக்க பட்டது , அதன் ஆழமும் அகலமும் வங்க கடலை ஒத்திருந்தது . அதன் கரையிலேயே பெருமாளுக்கு ஒரு கற்றலியும் ( கல்லால் கட்ட பட்ட கோவில் ) எடுபிக்க பட்டது , கோவிலின் பெயர் வீரநாராயண சொளிஷ்சுவரம் . இன்றளவும் அந்த கோவில் அங்கு கவனிப்பாரின்றி கிடக்கிறது , படைத்தலைவன் தான் வெட்டிய ஏரிக்கு தன்னுடைய தந்தையின் பெயரையே வைத்து எல்லோரும் அப்பெயரிலேயே எல்லோரையும் அழைக்க செய்தான். அந்த ஏரியை வீரநாராயணன் ஏறி என்று மக்கள் அழைத்தனர் . ( முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீர நாராயணன் ஆகும் } இன்று அது மருவி வீராணம் ஏரி என்று அழைக்கபடுகிறது. அன்று மன்னன் ஆகட்டும் அவர் மகன் ஆகட்டும் எல்லோரும் காட்டிலும் மழையிலும் பணியிலும் வெயிலிலும் கஷ்ட பட்டனர் ஆனால் இன்று அரசாள வருபர்கள் கஷ்டம் என்ற வார்த்தையை புத்தகத்தில் மட்டுமே படிக்கின்றனர் , இந்த நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் இந்நாட்டு மக்களுக்கு நல்ல காலம், சரி அரசியல்வதிகளையும் அரசு அதிகாரிகளையும் மட்டுமே குறை கூறி பயன் இல்லை . தவறு நம்மிடமும் இருக்கிறது , எந்த ஒரு காரியத்தையும் அரசே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு இது நம்நாடு இதை வளமாக்கவும் வல்லரசாக்கவும் நமக்கும் கடமை இருக்கிறது .

Tuesday, August 16, 2011

நாடோடிமன்னன் பேசுகிறேன்

வணக்கம் நண்பர்களே , ஒரு சின்ன கவிதை என்னடா கவிதை சொல்ல போகிறேன் என்கிறானே , என்று பார்கதிர்கள் . சும்மா அப்ப அப்ப அவ்ளோவுதான்.................!







முரண்பாடு : சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை படிப்தற்கு கூட சதி சான்றிதழ் கேட்கும் எங்கள் பள்ளிக்கூடம்.........!

Wednesday, August 10, 2011

நாடோடிமன்னன் பேசுகிறேன்

வணக்கம் தோழர்களே , உலக சரித்திரம் பேச போகிறேன் என்று கூறினேன் அல்லவா, அப்படி சரித்திரம் பேசுனா! அதில தமிழகத்தை பத்தி கண்டிப்பா சொல்லணும் , இல்லேன்னா அது சரித்திரமே இல்லை . அந்த அளவுக்கு தமிழகம் சரிதிரதிரம் உயர்ந்தது . அதற்கு உதாரணம் ஒரு சிறு கதை . என்னடா இவன் கதை சொல்ல போகிறேன் என்று நினைகதிர்கள் , சிறு கதைதான் . அன்று பாண்டியர் அரண்மனை பெரும் கலக்கத்தில் இருந்தது , காரணம் இரு அயல் நாட்டு வணிகர்கள் கிளப்பிய பிரச்சனையே , அவர்களுக்கு தங்கள் வணிக பொருட்களின் லாபங்களை பிரிப்பதில் பெரும் சர்ச்சை எழுந்தது , பிரச்சனைக்கு தீர்வு காண மன்னனிடம் சென்று முறையிடலாம் என கருதினர் . ஆகவே இருவரும் அரண்மனைக்கு புறப்பட்டனர் அங்கு வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது , காரணம் மன்னன் பதினெட்டே வயதே மதிக்க கூடிய இளம் வாலிபன் , எந்த அனுபவமும் இல்லாத இந்த சிறு வலிபநிடமிருந்து தங்களுக்கு என்ன நீதி கிடைத்து விடபோகிறது என்று பெருமுசெரின்தனர் , சரி சபை பெரியோர்களிடமும் அமைச்சர்களிடமும் நீதி கேட்கலாம் என்றால் " அவர்களும் இப் பிரச்னை குறித்த தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் தவித்தனர் , பாண்டிய நாட்டின் நீதி பரிபாலனம் இவ் வணிகர்களால் பெரும் அவப்பெயரினை பெரும் என்று சபையோர் கலக்கமுற்றனர் , அப்போது அரியணையில் அமர்ந்திருந்த பாண்டிய மன்னன் வணிகர்களே தங்களின் ஐயத்தை நாங்கள் அறிவோம் . கலக்கம் வேண்டாம் தங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் ஒரு நபர் எம்மிடம் இருக்கிறார் , நாளை காலை அரண்மனைக்கு வாருங்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் , அமைச்சரே அது இவர்களை நமது விருந்தினர் மாளிகையில் தங்க வையுங்கள் , மறு நாள் பொழுது பிறந்தது , சபை கூடியது . அரியணை வெறுமையை இருந்தது பக்கத்திலேயே ஒரு சிறு ஆசனம் போடப்பட்டு அதில் ஓர் கிழவர் அமர்ந்திருந்தார் , முன்தினம் மன்னர் கூறிய நபர் அவரகதான் இருக்கும் என சபையோர் கருதினர் , அவரை இதற்கு முன் யாருமே பார்த்ததில்லை , வழக்கு கிழவரிடம் கூறப்பட்டது , கிழவர் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் வழக்கிற்கு ஓர் நல்ல தீர்பளித்தார் . பின்பு சபையோரை நோக்கி சபையோர்களே இவர்கள் நம் விருந்தினர் என்று மன்னர் என்னிடம் கூறினார் ஆகவே விருந்தினர்க்கு பரிசில் கொடுப்பது நமது மரபு , இதோ எனது பரிசு என்று கூறிய கிழவர் கண் இமைக்கும் நேரத்தில் தனது தலை முடியையும் தடியையும் பிய்த்து வீசினர் , அடுத்து நொடி சபையே ஆ வென வை பிளந்தது , அங்கே அழகிய இளம் பாண்டிய மன்னன் நின்று கொண்டிருந்தான் , வணிகர்களே என் வயதை வைத்து என்னை தங்கள் மதிபிட்டிர்கள் அதனால் எமக்கு அனுபவம் குறைவென கருதிநீர் , யாரையும் வயதை வைத்து எடை போடுவது தவறு என்பதை வயதில் பெரியவராகிய தங்களுக்கு நான் உணர்த்த தேவை இல்லை என்றார் , வணிகர்கள் தலை கவிந்தன்ர் , பின்பு மன்னனிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டு அவரை மனதார வாழ்த்தினார்கள் , ( நீதி : வயதை கொண்டு யாரையும் எடை போடா கூடாது குழந்தைகளே ) என்னடா குழந்தைகளே என்கிறானே என்று பார்கிரிர்களா , இது நான் குழந்தைகளுக்கு சொன்ன கதை . பெரியவர்களுக்கு இனி வரும் , சரி அந்த பாண்டிய மன்னர் யார் தெரியுமா? தலையங்கனம் என்ற இடத்தில சேரர்களையும் சோழர்களையும் ஒரு சேர வென்றவன் , "தலையங்கனத்து சேறுவென்ற நெடுஞ்செழிய பாண்டியன் " . பாண்டிய வம்சத்தில் மிக இளம் வயதில் அரியணை ஏறியவன் என்ற பெருமையும் இவனுக்கு உண்டு . ஆனால் இன்று இளைய தலை முறையின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது, இந்த பாண்டியனை போல் நாமும் பிறந்த நாட்டின் பெருமை காக்க வேண்டாமா?

Tuesday, August 09, 2011

நாடோடிமன்னன் பேசுகிறேன்

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம் ,
நண்பர்களே இனி எந்த வலை தளத்துல நான் படிச்சது பார்த்தது கேட்டது , மற்றும் என் அனுபவங்கள் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் . எனக்கு வலைதளத்தில் தமிழில் ஏழுதுவது இதுதான் முதல் முறை, ஆகவே தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் . நான் யார் எந்த ஊர் என்ன பேர் அதபத்தி எல்லாம் நான் சொல்ல போறதில்லை அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. நான் சின்ன வயசா இருக்கும் பொழுது ஜவகர்லால் நேரு தன் மகளுக்கு (இந்திரா காந்தி )_ சிறையிலிருந்து கடிதம் எழுதினார், கடிதம்னா அது வெறும் கடிதம் இல்லை "உலக சரித்திரம் "